பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் தொடர்ந்தும் நாட்­கூ­லி­க­ளாக இருந்து வரு­வ­தை அனு­ம­திக்க முடி­யாது. இந்­நிலை மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு இம்­மக்கள் நில­வு­டைமைச் சமூ­க­மாக மேலெ­ழும்­பு­வ­தற்கு ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ வலு­ச்சேர்க்க வேண்டும் என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

ஜன­நா­யக நாடு­களில் தேர்­தல்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. தேர்­தல்­களின் ஊடாக மக்கள் தமது பிர­தி­நி­தி­களை தெரிவு செய்து அர­சி­ய­லுக்கு அனுப்பி வைக்­கின்­றனர். இந்த வகையில் கடந்த வாரம் இலங்­கையில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் ஜன­நா­ய­கத்­துக்கு வலுச்­சேர்க்கும் வகையில் மிகவும் சிறப்­பாக நடந்து முடிந்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க ஒரு விட­ய­மாகும். இத்­தேர்­தலில் கோத்­த­பாய ராஜபக் ஷ  வெற்­றி­பெற்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வாகி இருக்­கின்றார். இத்­தேர்­தலில் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­குகள் ஒரு புற­மா­கவும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் இன்­னொரு புற­மா­கவும் என்று பிரிந்து நிற்­ப­தனை எம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் அதி­க­மாகக் கிடைத்­தன. மலை­யக மக்­களும் சஜித்­திற்கு தமது பூரண ஆத­ர­வை வழங்கி இருந்த நிலையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சஜித் வெற்­றி­பெற்­றி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய சிறு­பான்மை மக்கள் தமக்கு உரி­ய­வாறு வாக்­க­ளிக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­போதும் தமக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்கும், வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்கும் சம­மான சேவை­களை வழங்க உறு­தி­பூண்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் இந்­நாட்டில் அதி­க­முள்­ளன. காணி­யு­ரிமை, வீட்­டு­ரிமை, பொரு­ளா­தாரம், சுகா­தாரம், அரச தொழில் வாய்ப்பு என்று இம்­மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்­டிய ஒரு தேவை காணப்­ப­டு­கின்­றது. தமிழ் முற்­போக்கு கூட்­டணி மலை­யக மக்­களின் உரிமை சார்ந்த விட­யங்­களில் கடந்த காலத்தில் கவனம் செலுத்தி இம்­மக்­களின் எழுச்­சிக்கு உத­வி­யது. இம்­மக்­களை தேசிய நீரோட்­டத்தில் இணைத்துக் கொள்ளச் செய்யும் நோக்கில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி மேலும் பல வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தது. இவ்­வே­லைத்­திட்­டங்­களை தொடர்ந்தும் முன்­னெ­டுக்க மலை­யக அர­சி­யல்­வா­திகள் உறு­தி­பூண வேண்டும்.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் தொடர்ந்தும் நாட்­கூ­லி­க­ளா­கவே இருந்து வரு­கின்­றனர். இது மிகவும் வேத­னை­மிக்க விடயம் என்­ப­தோடு இதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இந்­நிலை மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு இம்­மக்கள் நில­வு­டைமைச் சமூ­க­மாக மேலெ­ழும்­பு­வ­தற்கு ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ வலுச்­சேர்க்க வேண்டும். சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களும், நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­களும் ஜன­நா­யக ரீதியில் தீர்த்து வைக்­கப்­ப­டுதல் வேண்டும். இலங்­கையின் இனப் பிரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் என்று உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­க­ளிலும் கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு நாட்டில் அமைதிச் சூழ­லுக்கு வித்­தி­டப்­பட்­ட­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வை பெற்றுக் கொடுப்­பதில் இன்னும் இழு­பறி நிலை­மை­களே இருந்து வரு­கின்­றன. ஆட்­சி­யா­ளர்­களின் அச­மந்தப் போக்கும் இவ்­வி­ட­யத்தில் பிர­தி­ப­லிக்­கின்­றது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தனது பத­விக் ­கா­லத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வை பெற்­றுக்­கொ­டுக்க முற்­ப­டுதல் வேண்டும்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் நிலையில் மலை­யக மக்­க­ளுக்கும் உரி­ய­வாறு அதி­காரப் பகிர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படல் வேண்டும். முறை­யான அதி­காரப் பகிர்வு இல்­லாமை, நிர்­வாக ரீதியான புறக்கணிப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தேசிய நீரோட்டத்தில் இம்மக்கள் இணைந்து கொள்வதில் சிக்கல் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன என்பதையும் மறந்து விடுதலாகாது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றும் விடயம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இவ்விடயம் குறித்தும் கவனம் செலுத்தி மலையக மக்களின் அபிவிருத்திக்கு வித்திட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.