பிரித்­தா­னியப் பிர­தமர் போரிஸ் ஜோன்­ஸனும் தொழிற்­கட்சித் தலைவர் ஜெரேமி கொர்­பைனும் நேற்று முன்­தினம் செவ்­வாய் க்­கி­ழமை தமது முத­லா­வது தொலைக்­காட்சி தேர்தல் பிர­சார விவா­தத்தின் போது பிறிக்ஸிட் தொடர்பில் கடும் கருத்து மோத லில் ஈடு­பட்­டனர்.

இந்த விவா­தத்தின் போது பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வது தொடர்­பான தேசிய பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு உறு­தி­ய­ளித்த போரிஸ் ஜோன்ஸன், தொழிற்­கட்­சி­யா­னது பிரி­வி­னை­யையும் முட்­டுக்­கட்­டை­யையும் மட்­டுமே முன்­வைப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டி னார்.

கொர்பைன் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு ஆத­ர­வா­கவா அன்றி எதி­ரா­கவா பிர­சாரம் செய்து வரு­கிறார் என்­பதை அறிந்து கொள்ள முடி­யா­துள்­ள­தாக தெரி­வித்த  அவர், கொர்­பைனின் கொள்­கையில் வெற்­றி­ட­மொன்­றுள்­ள­தாகக் கூறினார்.

அதே­ச­மயம் கொர்பைன் கூறு­கையில், தனது கட்­சி­யா­னது பிறிக்­ஸிட்டை எட்டும் செயற்­கி­ர­மத்தை வரி­சைப்­ப­டுத்தி மக்­க­ளுக்கு இறுதி முடிவை எடுக்கும் வாய்ப்பை வழங்­கு­வ­தாக குறிப்­பிட்டார்.

ஜோன்ஸன் அமெ­ரிக்­கா­வுடன் தொட­ராக இர­க­சிய சந்­திப்­பு­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர் பிரித்­தா­னிய மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கான உற்­பத்­தி­க­ளுக்கு அமெ ரிக்காவுக்கு முமுமையான சந்தை வாய் ப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு வதாகவும் அவர் கூறினார்.

அதற்குப் பதிலளித்த ஜோன்ஸன், இது முற்று முழுதாக கற்பனை யாக  உருவாக்கப்பட்ட குற் றச்சாட்டு எனக் கூறினார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை களில் இந்த அரசாங்கமோ அன்றி எந்தவொரு பழை மைவாத அரசாங்கமோ பிரித்தானிய மருத்துவத் துறையை எத்தகைய சூழ் நிலையிலும் சம்பந்தப்படு த்தவில்லை என அவர் தெரி வித்தார்.

இதன்போது இரு தலை வர்களும் நம்பிக்கை, தலை மைத்துவம், ஸ்கொட்லாந் தின் எதிர்காலம் மற்றும் அரச குடும்பம் என்பன தொடர்பில் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

இந்தத் தொலைக்காட்சி விவாதத்தை யொட்டி இடம்பெற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்ஸனுக்கு ஆதரவாக 51 சதவீதத்தினரும்  கொர்பை னுக்கு ஆதரவாக 49 சதவீதத்தினரும் வாக்க ளித்துள்ளனர்.