பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று பிரிஸ்போனில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 16 வயதுடைய இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

கிரிக்கெட்டில் உலகில் அநேக புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் ஜொலிக்காமல் சென்றுள்ளனர். சிலர் ஜொலித்துள்ளனர்.

ஷாகித் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு ஹசன் ராசா தனது 14 வயதில் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் என்ற சாதனையை பெற்றார். பின்நாளில் அவரது வயது குறித்த சர்ச்சை விவாதமாக மாறியது.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர்தான் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந் நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இன்று பிரிஸ்பேனில் ஆரம்பமாகியுள்ள டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 16 வயதான நீசம் ஷா என்ற வீரர் களமிறங்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 8 ஓவர்களை மிகவும் அபாரமாக பந்து வீசினார் நீசம் ஷா. அவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. நசீம் ஷா பந்து வீச்சு அனைவரையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரை 2:0 என்ற கணக்கில‍ை இழந்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இந் நிலையில் இன்றைய தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சற்று முன்னர் 66 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை 180 இழந்து ஓட்டங்களை குவித்துள்ளது.