வெல்கமவினால் எனக்கு மரண அச்சுறுத்தல்  

Published By: MD.Lucias

04 Dec, 2015 | 09:40 AM
image

முன்னைய ஆட்சியின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு பஸ் வண்டி கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில்  பாராளுமன்றத்தில் உரையாற்றிமைக்காக முன்னைய அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாரசிங்க குற்றம்சுமத்தினார்.

இது தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னைய ஆட்சியின் போது 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 2200 பஸ்வண்டிகளை இறக்குமதி செய்ததில் 286 கோடி ரூபாவை மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜங்க அமைச்சர்களான ரன்ஜன் ராமநாயக்க மற்றும் அசோக அபேசிங்க ஆகியோர் இலஞ்ச மற்றும் ஊழல் விசாணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர்.

இந்த பஸ் வண்டி கொள்வனவில் பாரியளவில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் குமார வெல்கமவே பொறுப்பு கூறவேண்டும்.

 

எனவே இது தொடர்பில் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தேன். இது என்னுடைய கருத்து சுதந்திரமாகும். இருந்தபோதிலும் என்னுடைய பாராளுமன்ற உரைக்கு எதிராக குமார வெல்கம எம்.பி என்னை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தினார். 

ஆகவே இது தொடர்பில் உரிய நடவடிக்கையை அரசாங்கம்  எடுக்கவேண்டும். மேலும் இந்த விடயத்தை நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்வேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33