இன்று நடைபெறவுள்ள அரசியல் மாற்றம் ! பிர­த­ம­ராகிறார் மஹிந்த ! எவருக்கு அமைச்சுப் பொறுப்பு ?

Published By: Digital Desk 3

21 Nov, 2019 | 10:01 AM
image

(ரொபட் அன்­டனி)

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பகஷ இன்று இலங்­கையின் புதிய பிர­த­ம­ராக ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­ப­ட­வி­ருக்­கிறார்.

இன்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்த பின்னர் புதிய பிர­தமர் நிய­மனம் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக்ஷ நிய­மிக்­கப்­ப­டு­வ­துடன் அதனைத் தொடர்ந்து எதிர்­வரும் மூன்று மாதங்­க­ளுக்கு இடைக்­கால அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்­காக 15 பேர் கொண்ட அமைச்­ச­ரவை ஒன்றும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ச பத­வி­யேற்றுக் கொண்ட பின்னர் பிர­தமர் நிய­மனம் தொடர்பில் ஆரா­யப்­பட்டு வந்­தது. இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஸ் குண­வர்த்­த­னவை பிர­த­ம­ராக நிய­மிக்­கலாம் என மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பில் விருப்பம் தெரி­விக்­கப்­பட்­டது.

எனினும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையே பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்றும் அவரை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தற்கே மக்­களின் ஆணை கிடைத்­துள்­ள­தா­கவும் மஹிந்த தரப்பு எம்.பி.க்கள் வலி­யு­றுத்தி வந்­தனர். இந்த நிலை­யி­லேயே இன்­றைய தினம் பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக்ஷ நிய­மிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை இன்­றைய தினமே எதிர்­வரும் மூன்று மாதங்­க­ளுக்­கான இடைக்­கால அர­சாங்­கத்­துக்­கான 15 அமைச்­சர்­களும் நிய­மனம் பெறு­வார்கள் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் குறிப்­பாக மஹிந்த தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் அங்கம் வகிக்கும்  கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­போன்று ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவா­னந்தா, இ.தொ.க. தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் ஆகி­யோ­ருக்கும் அமைச்சுப் பத­விகள் கிடைக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ நிய­மனம் பெற்­றதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­தில்லை என்ற நிலைப்­பாட்டில் இருந்திருந்தார். எனினும் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின் பின்னர் இன்றைய தினம் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருக்கிறார். அதனடிப்படையிலேயே இன்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04