சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மக்களை முன்கூட்டியே தெளிவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

சட்டவிரோத குடியீர்ப்புக்கள் உட்பட நகரமயமாக்களின் காரணமாகவே இயற்கை அனர்த்தங்களை முகம் கொடுப்பதானது தற்காலத்தில் மிகபெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மேலும் நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை தொடர்வதனால் அரசினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவிய போதே அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.