தாய்லாந்து மற்றும் லாவோஸின் எல்லைக்கு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவில் நில அதிர்வை உணர முடிந்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 6.1 அலகாக பதிவாகியுள்ளது. தாய்லாந்தின் முவாங் நான் மாகாணத்தின் வடகிழக்கில் 92 கிமீ (57 மைல்) தொலைவில் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

லாவோஸில் அந்நாட்டு நேரப்படி காலை 6.50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து ஏற்பட்ட நில அதிர்வு,  வடக்கு மற்றும் வடகிழக்கு தாய்லாந்து மற்றும் பெங்கொக் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உணரப்பட்டது" என்று தாய்லாந்து வானிலை ஆய்வு பிரிவின் அதிகாரி கூறியுள்ளார்.

வியட்னாம் தலைநகர் ஹனோய்க்குள் வசிப்பவர்கள் கூடுதலாக கட்டிடங்களைத் தாக்கியதாக உணர்ந்தனர்.

"வீடுகளிலுள்ள விளக்குகள் மிகவும் வலுவாக நடுங்கியதோடு, 27 அடுக்கு தொடர்மாடி கட்டிடத்தில் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

லாவோஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சயாபுரி அணை அருகில் 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.