இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் அண்டனி நடித்து வரும் ‘அக்னிசிறகுகள்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

மூடர்கூடம், அலாவுதீனும் அற்புத கெமரா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் தற்போது ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் அண்டனி, அருண்விஜய், அக்ஷராஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், தலைவாசல் விஜய், ரைமா சென், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய் அண்டனி, சீனு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் நவீன் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். படத்தைப் பற்றி அவர் தெரிவிக்கையில்,

“ விஜய் அண்டனி நடிக்கும் கதாபாத்திரத்திற்கு சீனு என்று பெயர் வைத்ததும் ஒரு காரணம் இருக்கிறது. அதற்கான விடையும் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு தெரிய வரும். விரைவில் கஜகஸ்தானில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. அங்கு அடுத்த மாதம் பனிப்பொழிவு தொடங்கும். அதற்காக காத்திருக்கிறோம். தொடங்கியவுடன் அங்கு சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.” என்றார்.

விஜய் அண்டனியின் புதிய இரசனையான தோற்றத்தை அவரது ரசிகர்கள் வரவேற்று, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதனிடையேநடிகர் விஜய் அண்டனி, தற்போது தமிழரசன் மற்றும் காக்கி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.