பொகவந்தலாவ, செல்வகந்த தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 7 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (20) மாலை 3 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் உள்ள 5 ஆம் இலக்க தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக குளவித் தாக்குதலுக்குள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் காயங்களுக்கு உள்ளான ஏழு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.