வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண சபை விரும்புகின்றது. எவ்வாறு இருப்பினும் வடமாகாண சபையும் தமிழகமும் நட்புறவை பேணுவதால் அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் தான் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர தமிழக முதல்வர் ஜெயலலிதா அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலிதாவிடம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.