(ஆர்.விதுஷா)

புதிய அரசாங்கத்தில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளை  நியமிக்கும்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கீழ் பணியாற்றி ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை கொண்ட உயர் அதிகாரிகளை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டாம் என  அரசாங்க மருத்துவ அதிகாரிகள்  சங்கம்  புதிய அரசாங்கத்திடம் வேண்டுகோள்  விடுத்துள்ளது. 

சுகாதார துறையில் காணப்படும் குறைபாடுகளை  சுட்டிக்காட்டியதுடன், அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி விலகுமாறும் கூறி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்  நாடளாவிய ரீதியில் அண்மை  காலத்தில்   போராட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.