சீனாவிலுள்ள அழகு நிலைய உட்கூரையில் 10 ஆண்டுகளாக வசித்து வந்த மலைப்பாம்பு கூரையை பிளந்துக்கொண்டு கீழே விழுந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் உள்ள போசன் நகரில் பிரபலமான அழகு மற்றும் உடல்நல ஆரோக்கிய நிலையம் ஒன்று உள்ளது.
குறித்த நிலையத்தின் உட்கூரையின் மீது கடந்த வாரம் ஏதோ சலசலப்பு கேட்டது. சத்தம் அதிகமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென கூரை உடைந்த போது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கீழே விழுந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
இதையடுத்து பொலிஸாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பு பிடிப்பவர் உதவியுடன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்பு அந்த மலைப்பாம்பு மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
‘சுமார் 20 கிலோ எடை உள்ள இந்த பாம்பு 10 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்திருக்கக் கூடும். இந்த பகுதியில் அதிக அளவில் உணவகங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் பெருகி உள்ள எலிகளை உட்கொள்ள பாம்பு வந்திருக்கலாம்’ என பாம்பை பிடித்தவர் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கூரை சுவர்களில் அத்தகைய பாம்பு வாழ்வதைப் பற்றி கேள்விப்பட்டதாக அழகு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM