மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூவர் பயணித்தபோது சைக்கிளை செலுத்தியவர் அதிவேகமாக சென்றதில் மதில் ஒன்றில் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (20) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை சந்தை வீதியிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் ஓட்டமாவடி பகுதிலிருந்து மீராவோடை நோக்கி குறித்த வீதியில் அதிவேகமாக பயணித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதியுள்ளது. 

இதனால் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பாட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் தலைக்கவசம் இன்றி பயனித்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனுக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.