ஸ்கொட்லாந்தை சேர்ந்த வரைபட கலைஞர் ஒருவர் 4520 சதுர அடியில் கருப்பு வெள்ளை பூக்கள் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர் ஜோஹன்னா பாஸ்போர்ட் வயது வந்தோருக்கான வனவிலங்குகள் மற்றும் மலர்கள் தொடர்புடைய வண்ண புத்தகங்களின் மூலம் புகழ்பெற்றவர். இளம் வயதில் இருந்தே படம் வரையும் கலையில் ஆர்வம் கொண்ட ஜோஹன்னா கின்னஸ் சாதனையை படைக்கும் முயற்சியாக தரையில் படம் வரைந்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் அபெர்டீன்சையர் நகரில் உள்ள எல்லோன் கல்வி நிலையத்தில் பயின்ற ஜோஹன்னா தனது மகத்தான இந்த திட்டத்திற்கு அங்குள்ள ஒரு இடத்தையே தெரிவு செய்தார். 

குறித்த பெண் 12 மணி நேரத்திற்குள் 4520 சதுர அடியில் கருப்பு வெள்ளை நிற பூக்கள் வரைந்து சாதனை படைத்துள்ளார்.