மத்திய மாகாணத்தில் ஞாயிறுக்கிழமை காலையில் நடைபெறும் அனைத்து வகுப்புகளுக்கும் எதிர்வரும் பொசன் போயா தினத்திலிருந்து தடை விதிக்கப்போவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

சமய கல்வி நடவடிக்கைகளில் சிறுவர்கள் அதிக நாட்டத்துடன் ஈடுபடுவதற்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தின் மத நல்லிணக்கம் தொடர்பான சிறப்பு ஆலோசனைக்குழு மற்றும் மத்திய மாகாணத்தின் ஒத்துழைப்புடனும் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மத தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையின் பேரிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.