(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை கொண்டுசெல்வதா அல்லது  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் காபந்து அரசாங்கத்தை அமைப்பதா என்ற தீர்மானம் எடுக்கும் அவசர பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டம் ஒன்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர் அரசாங்கத்தை கொண்டு செல்வதில் நெருக்கடி நிலைமைகளில் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பதவி விலக்கிவிட்டு புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையில் காபந்து அரசாங்கம் ஒன்றினை கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து ஆராயும் வகையில்  விசேட கட்சி தலைவர் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூடுகின்றது.

 சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி தலைவர்களுக்கும் சபாநாயகர்  அழைப்பு விடுத்துள்ளார்.