பதவியை இராஜினாமா செய்தார் ரணில்!

Published By: Vishnu

20 Nov, 2019 | 04:46 PM
image

ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதோடு, இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு புதிய காபந்து அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு இட­ம­ளிக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று புதன்­கி­ழமை பிர­தமர் பத­வியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இன்­றைய தினம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுடன்  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.  

இதே­வேளை இன்­றைய தினம் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ புதிய பிர­தமர் தலை­மை­யி­லான  15 அமைச்­சர்­களைக் கொண்ட ஒரு காபந்து அர­சாங்­கத்தை அமைக்கவுள்ளார்.

சட்டம்  ஒழுங்கு  நிதி  நீதி வெளி­வி­வ­காரம்  உள்­ளிட்ட 15 அமைச்­சுக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. அவற்­றுக்கே  அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.  

கடந்த திங்­கட்­கி­ழமை  புதிய ஜனா­தி­ப­தி­யாக  கோத்­தாபய ராஜ­பக்ஷ பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சாங்கம்  அமைக்­கப்­படும் என்று  எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும்  ஐக்­கிய தேசிய கட்­சியின்  தலை­வரும் பிர­த­ம­ரு­மான  ரணில் விக்­ர­ம­சிங்க இன்றைய தினம் பிரதமர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ள நிலையில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் சாத்தியம் உள்ளது.

எனினும் பல்­வேறு தரப்­பி­னரு ம் ரணில் விக்­ர­ம­சிங்க  பிர­தமர் பத­வியை  இரா­ஜி­னாமா செய்து புதிய அர­சாங்கம் அமைக்க  இட­ம­ளிக்­க­வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும்  சபா­நா­ய­கரும்  பிர­த­மரும் எதிர்க்­கட்சி தலை­வரும்  இது தொடர்பில் பேச்­சு­வார்த்­தையும் நடத்­தி­யி­ருந்­தனர்.  

குறித்த சந்­திப்பில் அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­வது தொடர்­பிலும் பாரா­ளு­மன்ற  தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆராயப்பட்­டுள்­ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற  நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்­தாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியதைடுத்து  நாட்டில் புதிய அரசியல் நிலைமை தோன்றியுள்ள நிலையில் ஆளும் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்ர்கள் தமது அமைச்சுப்பொறுப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக இராஜிநாமா செய்து வந்த நிலையில் இன்றையதினம் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58