குடும்பக்கட்டுபாடு, கருத்தடை சாதனங்கள் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு தொடர்பான அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இவ்வாறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு தொலைக்காட்சி ஒளி பரப்பு ஒழுங்கு துறை ஆணைக்குழு மற்றும் அந்நாட்டு வானொலி நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரங்களினூடாக குழந்தை ஆர்வம் தூண்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்தே இவ்வாறான தடை உத்தரவினை வழங்கியதாக வெளிநாட்டு செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

உலக சனத்தொகையில் பாகிஸ்தான் 6 ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

அந்நாட்டில் பிறப்பு கட்டுப்பாட்டு வசதிகள் குறைவாகக் காணப்படுவதே இதற்கு காரணமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.