இன்று (20.11.2019) பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதால் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் குறுித்த நீர் வெட்டு அமுலில் உள்ளது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு பேலியகொட, மாபோல, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை, பியகம, மஹர மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.