அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாட்டுச் சாண வறட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக, கிராமப் புறங்களில் விறகு அடுப்புகளுக்கு எரிபொருளாகவும், நகர் புறங்களில் வீடு மற்றும் கோயில்களில் நடக்கும் யாகங்கள், இந்துக்களில் இறுதிச்சடங்குகளின் போதும், மாட்டு சாணத்தில் தயாரிக்கப்படும் வறட்டிகள் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வறட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது.

10 வறட்டிகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை 2.99 அமெரிக்க டொலர்கள் இந்த பாக்கெட்களின் மீது, ‘இது, மத சடங்குகளுக்கு மட்டுமே; உண்பதற்கு அல்ல’ என்ற எச்சரிக்கை வாசகமும் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.