கிராமிய இசை பாடகராகவும், திரைப்பட பின்னணி இசை பாடகராகவும் பிரபலமான பாடகர் அந்தோணி தாசன் ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற படத்திற்கு இசை அமைக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம், தற்பொழுது சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் தயாராகிவரும் ‘எம் ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் டப்மாஷ் மூலம் புகழ்பெற்ற மிருணாளினி ரவி கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘நெடுநல்வாடை ’பட புகழ் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்சன் படத்தை தொகுக்கிறார். இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசை அமைப்பாளராக பணியாற்றுகிறார்.

பாடகராக அறிமுகமாகி பிரபலமான அந்தோணிதாசன், கிராமிய பின்னணியில் உருவாகும் ‘எம் ஜி ஆர் மகன்’ என்ற படத்தின் படத்திற்கு இசை அமைக்கிறார். இதன் மூலம் இந்த ஆண்டில் பாடகராக இருந்து இசையமைப்பாளராக உயர்ந்த கார்த்திக், சித் ஸ்ரீராம் வரிசையில் அந்தோணிதாசனும் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தின் படபிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.