(ஆர்.யசி)

வடக்கு கிழக்கை இணைக்கும் நாட்டினை துண்டாடும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்த  தகுதியில்லாதவர்கள் என்பது உறுதியாகவிட்டது. வெகு விரைவில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம். அதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார். 

பல தரப்புடன் அவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் வருகின்றார். எவ்வாறு இருப்பினும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் பாராளுமன்றத்தில் கலைக்க முடியாத சட்ட சிக்கல்கள் உள்ளன. 19 ஆம் திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றம் அடுத்த ஆண்டு முதல் இரு மாதங்கள் வரையில் கொண்டுசெல்லப்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரை அமர முடியாது. 

எனவே காபந்து அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. எம்மால் அரசாங்கத்தை பொறுப்பேற்க முடியும்.  எமது அரசாங்கத்தில் எவரையைல் புதிதாக இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.