டில்லி செல்லும் விமான பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்று ‘ஏர் ஏசியா இந்தியா’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பயணிகளின் ஆரோக்கியம் கருதி பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களிலிருந்து டில்லி செல்லும் விமான பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்று ‘ஏர் ஏசியா இந்தியா’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த திட்டம் நேற்றே ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 29ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு இந்த முகக்கவசம் வழங்கப்படும். இந்த திட்டம் ‘எம்பைன்’ நிறுவனத்துடன் இணைந்து அமுல்படுத்தப்படுகிறது. குளிர்காலம் தொடங்கியதும் டில்லியில் காற்று மாசு குறைந்துவிடும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.