புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த, நிறைவேற்றதிகாரம் கொண்ட இலங்கையின் 7ஆவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று (20.11.2019) காலை கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்கவினால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள உயரிய பௌத்த ஸ்தலமான தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களை மேற்கொண்டார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளுக்கு சென்று ஜனாதிபதி மரியாதை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.