சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் - சிவஞானம் சிறிதரன் 

Published By: Digital Desk 4

20 Nov, 2019 | 11:55 AM
image

சிறுபான்மை தேசிய இனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்து வாக்களித்து தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியதன்  ஊடாக தமது மன எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடான கள நிலைமைகள் குறித்து கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள்  உடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவையாக இருக்கலாம் ஆனால் தமிழ்தேசிய உணர்வுடன் அனைவரும் துணிவுடன் பயணிக்கவேண்டும் பயணித்து எமது இனத்தினுடைய இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் இந்தத் தேர்தலில் நாம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கின்றோம்.

இந்த இலங்கைத் தீவில் சிறுபான்மை தேசிய இனங்கள் ஆகிய நாங்கள் பெரும்பான்மைத் தேசிய இனத்திற்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் வழங்கக் கூடிய தலைவர்களை ஏற்றுக்கொள்வோம் என்பதையும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோருகிறோம் என்பதுமாகும் 

இதைப் புரிந்து கொண்டு புதிதாக பதவி ஏற்றிருக்கும் ஜனாதிபதி செயற்படுவார் எனவும் எண்ணுகின்றேன் என்றார்.

இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08