திறமையான ஆளுமை மற்றும் ஊழல் மோசடிகள் அற்ற ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாநாயக இடதுசாரி முன்னணியின்  தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும், தேசிய அமைதிக்கும் நாட்டின் இறையான்மைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.