நியுஸ் இன் ஏசியா

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது.

நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர்.

தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும்,  முடிவடைந்துள்ள தேர்தல் வாக்களிப்பின்போக்கைஅடிப்படையாக வைத்து பார்க்கும்போது புலனாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச சிங்களதீவிரவாத போக்கை கொண்டவர் என கருதியதன் காரணமாகவே சஜித்பிரேமதாசவிற்கு தமிழர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

சஜித்பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவி;த்த சிறிய அரசமைப்பு சலுகைகளை கூட தங்களிற்கு கிடைக்காது என அவர்கள் அஞ்சினர்.கோத்தபாய ராஜபக்ச அதிகாரப்பகிர்வு குறித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கவில்லை,சஜித் தெரிவித்தது போன்று அதிகாரங்களை அதிகரிப்பது  குறித்தோ,மத்தியில் அதிகாரப்பகிர்வு குறி;த்தோ அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அனைவரையும் உள்;ளடக்கிய சமாதானம் வளம்  ஆகியவற்றிற்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தான் விடுத்த அழைப்பிற்கு தமிழர்களும் முஸ்லீம்களும் பதிலளிக்காதது குறித்து  கோத்தபாய ராஜபக்ச கவலைவெளியிட்டார்.

தான் அனைத்து இலங்கையர்களினதும்  ஜனாதிபதி, ஒரு பகுதியினரின் ஜனாதிபதி இல்லை என்ற அறிக்கை தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் செவிகளில் விழவில்லை என  அவர். தெரிவித்தார்.

மேற்குலகின் உதவியுடன் சிங்கள தமிழ் மோதல் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது ,2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நசுக்கப்பட்ட தமிழ் தீவிரவாதத்தை ஈது மீண்டும் வளர்ச்சியடைய  செய்யலாம்.

கடந்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக சாதாரண பிரஜைகள் நியமிக்கப்பட்டதிலிருந்து , பாதுகாப்பு நிபுணரும் முன்னாள் போர்வீரருமான ஜெனரல் கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை மாறுபட்ட நடவடிக்கையாகும்.தற்போது பதவி விலகிச்செல்லும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டேகொட மாத்திரமே இதில் விதிவிலக்காக காணப்பட்டார்.2019 ஏப்பிரல் 21 ம் திகதி இடம்பெற்ற ஜிகாத் தாக்குதல் குறித்துஇந்தியா வழங்கிய புலனாய்வு தகவல்களை கையாள்வதில் தோல்வியடைந்ததன் காரணமாக பாதுகாப்பு துறை சாராத முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து சாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டார்.

ஏப்பிரல் 21 ம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்தே இலங்கை புலனாய்வு ஒத்துழைப்பின் அடிப்படையின் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் உடனடி முக்கியத்துவம் எடுப்பதன் அவசியத்தையும் உணர்ந்தது.

யுத்தத்தின் மிகமுக்கியமான தருணத்தில் 53 வது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கிய கட்டளை தளபதி கமால் குணரட்ண புலனாய்வு தகவல்களின் முக்கியத்துவத்தைஅறிந்தவர் மாத்திரமல்ல  அவற்றை ஒருங்கிணைப்பு செய்து உரியநடவடிக்கையை எடுப்பதிலும் திறமையானவர். தலைமை அதிகாரியின் உத்தரவினை கண்டிப்பாக பின்பற்றக்கூடிய படைவீரர் அவர்,இதன் காரணமாக அவரது  தலைமை அதிகாரியான கோத்தாபய  -நம்பக்கூடியவராக குணரட்ண காணப்படுகின்றார்.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவும் கோத்தாபய ராஜபக்ச உருவாக்கிய புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்களை உள்ளடக்கிய வியத்மகா அமைப்பின் உறுப்பினருமான ஜெனரல்குணரட்ண,இனப்பிரச்சினை மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த கோத்தாபயவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகும் நபராக காணப்படுகின்றார்.

2016 செப்டம்பரில் நந்திக்கடலிற்கான வீதி என்ற தனது நூல் வெளியிட்டின் பின்னர் டெய்லி எவ்டியின் சானிக சிரியானந்தவிற்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலிகளின் கொள்கை இன்னமும் உயிர்ப்புடன்  உள்ளதால்,; சாதகமான சூழ்நிலை உருவானால் அவர்கள் மீண்டு;ம் திரும்பி வருவார்கள் என குணரட்ண தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல் ஈழத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பதால் அவர்கள் காணி நீதித்துறை பொலிஸ் அதிகாரங்களுடன் திருப்தியடைய மாட்டார்கள் என நான் கருதுகின்றேன் எனவும் அவர் குறி;ப்பிட்டார்.

நிலைமையை சரிவர கையாளவிட்டால் விடுதலைப்புலிகள் மீண்டும் வரலாம்,12000ற்கும் அதிகமான முன்னாள் புலிகள் சமூகத்தில் உள்ளனர் எனவும்அவர் தெரிவித்திருந்தார்.

அவர்கள் முழுமையான புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டபோதிலும் அவர்கள் 100 வீதம் மாற்றமடைந்துவிட்டனர் என தெரிவிக்க முடியாது எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை படையினர் தங்கள் பணியை ஈவிரக்கமற்ற விதத்தில் செய்துள்ளனர் என அவர்  தனது நூலில் தெரிவித்துள்ளார்.

குணரட்ணவின் நூல் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ் பொதுமக்களின் வீடுகளிற்கு தீவைப்பது,அப்பாவிபொதுமக்களை கொலை செய்வது தமிழ் மக்களின் வீடுகளி;ல் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டனர் என் குறிப்பிட்டுள்ளதாக  ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

மங்களசமரவீர அந்த நூலை இலங்கை படையினருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என  வர்ணித்திருந்தார்.

ஆனால் மாவோ சே துங் தெரிவித்துள்ளதை போல யுத்தம்என்பது தேநீர் விருந்தல்ல,இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத யுத்தமில்லை.மேலும் இரு தரப்பும்அநீதிகளில் ஈடுபட்டன, இதன் காரணமாக ஒரு தரப்பை மாத்திரம் சுட்டிக்காட்டி தாக்குவது நியாயமானது இல்லை.

மேலும் இலங்கை இராணுவத்தினர் 30 வருடங்களிற்கு மேல் எதிர்கொண்ட எதிரியை அமெரிக்கா உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத இயக்கம், என வர்ணித்துள்ளது.

பிரபாகரன் மிகவும் திறமையான அர்ப்பணிப்பு மிக்க படையணியை உருவாக்கினார் என குறிப்பிட்டுள்ள குணரட்ண இந்த படையணிக்கு தீபன் சூசை பால்ராஜ் போன்ற திறமையான தளபதிகள் தலைமை தாங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.