நடந்­து ­மு­டிந்த நாட்டின் 8ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வுகள் பல செய்­தி­களை உல­குக்கு எடுத்­துக்­கூ­றி­யுள்­ளது.

16.11.2019இல்­இ­டம்­பெற்ற 8ஆவது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ 52.25வீத வாக்­கு­க­ளைப்­பெற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். 41.99வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற புதிய ஜன­நா­ய­க­ முன்­னணி வேட்­பாளர் சஜித்­ பி­ரே­ம­தாச தோல்­வி­யைத்­த­ழு­வி­யுள்ளார்.

இம்­முறை 50வீத வாக்­கு­களை யாரும் பெற­மாட்­டார்கள். எனவே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்­குகள் எண்­ண­வேண்­டி­வரும் என்­றெல்லாம் கூறப்­பட்­டன. அத­னைப்­பொய்­யாக்கி 52.25வீத வாக்­கு­க­ளைப்­பெ­ற­ மு­டிந்­த­தற்கு பல்­வேறு வகை­யான யுக்­திகள் பயன்­பட்­டன எனலாம்.

கோத்த­பாய வெற்­றி­ய­டைந்­த­தற்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் கார­ணமோ என்­னவோ மொத்­தத்தில் சிறு­பான்­மைதான் காரணம் என்­பதை மறுக்­க­மு­டி­யாது. சஜித்­தோடு அணி­சேர்ந்த முஸ்லிம், தமிழ் பிர­தான கட்­சி­களின் கூட்­டுத்தான் கோத்தாவின் வெற்­றியை இல­கு­வாக்­கின என்று அர­சியல் நோக்­கர்கள் கோடிட்­டுக்­காட்­டு­கி­றார்கள்.

கடந்த ஏழு முறை இடம்­பெற்ற ஜனா­தி­ப­தி­ தேர்­தல்­க­ளின்­போது பெறப்­பட்ட வாக்­கு­வீ­தத்­தைப்­பற்றி சிறு­கண்­ணோட்டம் செலுத்­துவோம்.

20.10.1982இல் நடை­பெற்ற  முத­லா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 52.91வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

19.12.1988இல் நடை­பெற்ற  இரண்­டா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 50.43வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற ஆர்.பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

09.11.1994இல் நடை­பெற்ற  மூன்­றா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 62.28வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

21.12.1999இல் நடை­பெற்ற  நான்­கா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 51.12வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

17.11.2005இல் நடை­பெற்ற  ஐந்­தா­வது ஜனா­தி­ப­தித் ­தேர்­தலில் 50.29வீத வாக்­கு­க­ளைப் ­பெற்ற மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­ செய்­யப்­பட்டார்.

26.01.2010இல் நடை­பெற்ற  ஆறா­வது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 57.88வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

08.01.2015இல் நடை­பெற்ற  ஏழா­வது ஜனா­தி­ப­தித் ­தேர்­தலில் 51.28வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார்.

நாட்டில் இன­மத பேதங்கள் வேண்டாம் நீதி­யான சுதந்­தி­ர­மான நல்­லாட்சி வேண்டும் சிறு­பான்­மை­யி­னரை ஒதுக்­கக்­கூ­டாது. உண்­மை­யான ஜன­நா­யகம் வேண்டும் போன்­ற­பல செய்­தி­களை உரத்­துச்­சொல்­லி­யுள்­ளது என்­ப­தற்­கப்பால் நாம் பெரும்­பான்மை சிங்­கள்­மக்கள் நினைத்தால் சிறு­பான்­மை­யின வாக்­குகள் இல்­லா­மலே ஜனா­தி­ப­தியை உரு­வாக்­க­மு­டி­யு­மென்ற உண்­மையை எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது.

நிற்க இத்தேர்தலில் தமி­ழர்கள் குறிப்­பாக சிறு­பான்­மைச்­ச­மூகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடி­வுகள் மேலும் ­பல செய்­தி­களைச் சொல்­லி­யுள்­ளன. இம்­முறை தமிழ்­மக்கள் ஆர்­வத்­துடன் வாக்­க­ளித்­த­மையே இச்­செய்­திக்­குக்­கா­ர­ண­மாகும். 80வீதத்­திற்கு மேலாக வாக்­க­ளிப்பு இடம்­பெற்­றுள்­ளது.

2005இல் மஹிந்த வெல்­லவும் 2015இல் மஹிந்த தோற்­கவும் காரணம் வடக்­கு ­கி­ழக்கு மாகா­ணமே அதிலும் தமிழ்­மக்­களே எனலாம். ஆம் 2005 இல் ரணி­லுக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டா­மென விடு­த­லைப்­பு­லிகள் கூறி­ய­மை­யினால் மஹிந்த வென்றார். 2015இல் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளி­யுங்கள் என்று தமிழ்த்­த­ரப்பு கூறி­ய­மை­யினால் மஹிந்த தோற்றார்.

ஆனால் அந்­தச்­ச­மன்­பாடு இம்­முறை பொய்த்­துள்­ளது என்­பதை நாம் ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்டும்.

நாம் தான் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்தி நாம் தான் ஜனா­தி­ப­தி­யைக்­கொண்­டு­வந்தோம் என்ற மம­தை­யு­ட­னான கோசம் இனிமேல் எழுப்ப சந்­தர்ப்­ப­மில்லை.அந்த கோசமே அவர்­களை இவ்­வா­றான ஒரு முடி­வுக்­குக்­கொண்­டு­வ­ர­க்கா­ரணம் என்­ப­தையும் நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது.

குறிப்­பாக சஹ்ரான் தாக்­கு­த­லுக்­கு ­பிற்­பாடு முஸ்­லிம்­கள்­மீ­துள்ள எதிர்ப்­ப­லைகள் பெரும்­பான்­மை­யின மக்கள் மத்­தி­யிலே நிறை­யவே இருந்­தன. அதனை சஜித் தேசி­யத் ­த­லைவர் என்று கருதி அதனை கவ­னி­யாமல் விட்­டி­ருக்­கலாம்.

ஆனால் இன்­றைய முடி­வுக்கு அதுவும் ஒரு கார­ண­மென்­பதை நாம் மறுக்­க­மு­டி­யாது.

அடுத்து தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடும் அடுத்­த­ கா­ரணம். ஒரு­வாறு பல்­கலை மாண­வர்­களின் முயற்­சி­யினால் கூட்­டுச்­சேர்ந்த அவர்கள் தட்­டுத்­தடு­மாறி முடி­வு­களை தனித்­த­னி­யாக அறி­வித்­ததும் 13 என்ற அதிஷ்­ட­மற்ற இலக்­கத்தில் கோரிக்­கையை முன்­வைத்து மண்கௌ­விய சந்­தர்­ப்பங்­களும் முழு தமிழ்ச்­ ச­மூத்­தையே தலை­கு­னி­ய­வைத்­துள்­ளது.

மேலும் த.தே.கூட்­ட­மைப்பின் அண்­மைக்­கால போக்­குகள் தமிழ் ­மக்கள் மத்­தியில் சொல்­லு­ம­ள­விற்கு வர­வேற்­பைப்­ பெற்­றி­ருக்­க­வில்­லை­யென்­பதை அவ­தா­னிக்­க­வேண்டும். அவர்கள் அளித்த வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டமை, பிர­தே­ச­வாதம் தலை­தூக்­கி­யி­ருந்­தமை, கட்­சி­க­ளி­டையே ஒற்­று­மை­யின்மை போன்ற பல்­வேறு கார­ணிகள் பல­வீ­னத்­திற்கு கார­ண­மென்­பதை நோக்­கர்கள் சுட்­டவும் தவ­ற­வில்லை.

த.தே.கூட்­ட­மைப்பு மீண்­டு­மொ­ரு­முறை தன்னை இத­ய­சுத்­தி­யுடன் மீள சுய­ப­ரி­சீலனை செய்­து­கொள்­ள­வேண்டும். இல்­லா­விடில் அடுத்த தேர்­தலில் மிகவும் பல­வீ­ன­மான நிலை­­யை­ அ­டையக்­கூ­டு­மெ­ன­ க­ரு­தப்­ப­டு­கி­றது.

இம்­முறை வடக்கு கிழக்கு தமி­ழர்கள் கூடு­த­லாக சஜித்­திற்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள் என்­பது தேர்தல் முடி­வு­களில் தெரி­கி­றது. அதற்­காக த.தே.கூட்­ட­மைப்புக் கூறித்தான் இவர்கள் அத­னைச்­ செய்­தார்­களா? என்­பதில் ஐய­முள்­ள­தென ஒரு நோக்கர் கூறு­கிறார்.

சரி இனி வட-­கி­ழக்கு தேர்தல் முடி­வு­களை சற்று ஆய்வு செய்வோம்.

வடக்கில் யாழ்ப்­பாணம், வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்­டங்­களும் 14தேர்தல் தொகு­தி­களும் கிழக்கில் திரு­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய மூன்று மாவட்­டங்­களும் 10 தேர்தல் தொகு­தி­களும் உள்­ளன.

இத்­தேர்­தலில் 5 மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த 22 தேர்தல் தொகு­தி­க­ளிலும் உயிர்ப்­பான வாக்­க­ளிப்பு இடம்­பெற்­றன. இப்­ப­கு­தி­களில் வாழும் சிறு­பான்­மைச் ­ச­மூ­கங்­க­ளான தமிழ், முஸ்லிம் மக்கள் கூடிய வீதத்தில் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளித்­தனர்.

இதன்­படி வடக்கில் சகல தேர்தல் தொகு­தி­க­ளிலும் புதிய ஜன­நா­ய­க­ முன்­னணி வேட்­பாளர் சஜித்­ பி­ரே­ம­தாச வெற்­றி­பெற்­றுள்ளார். யாழ். ­மா­வட்­டத்தில் மட்டும் அவர் 312722வாக்­குக­ளைப் ­பெற்­று ­சாதனை படைத்­துள்ளார். அங்கு கோத்தபா­ய­விற்கு ஆக 23261வாக்­குகள் மாத்­தி­ரமே கிடைக்­கப்­பெற்­றன.

மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு ஆகிய நிரு­வாக மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய வன்னி தேர்தல் மாவட்­டத்தில் 174739வாக்­கு­களை சஜித் பிரே­ம­தாச பெற்­றுள்ளார். அங்கு கோட்­ட­பாய 26105வாக்­கு­க­ளையே பெற்­றுள்ளார்.

ஆக வட­மா­காணம் பூராக சஜித் அலையே வீசி­யுள்­ளது எனலாம்.

கிழக்­கிலும் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்கள் சஜித் வசமே வந்­துள்­ளன.

மட்டு.மாவட்­டத்தில் சஜித் 238649 வாக்­கு­க­ளையும் கோத்தா 38460வாக்­கு­க­ளையும் அம்­பாறை மாவட்­டத்­தில் ­சஜித் 259673வாக்கு­க­ளையும் கோத்தா 135038 வாக்­கு­க­ளையும் பெற்­றுள்ளனர். திரு­மலை மாவட்­டத்தில் சஜித் 166841வாக்­கு­க­ளையும் கோட்டா 54135வாக்­கு­க­ளையும் பெற்­றுள்ளனர்.

எனினும் அம்­பாறை சேரு­வில தொகு­திகள் கோத்தா வெற்­றி­பெற்­றுள்­ள­மை­யையும் சுட்­டிக்­காட்­டக்­கூ­டி­யது.

அம்­பா­றை ­தேர்­தல்­தொ­கு­தியில் கோத்த­பாய ராஜ­பக் ஷ 89674 வாக்­கு­க­ளையும் சஜித் 42242 வாக்­க­க­ளை­யும் ­பெற்­றுள்­ளனர். அதே­போன்று சேரு­வில தொகு­தியில் கோத்தா 31303வாக்­கு­க­ளையும் சஜித் 28205வாக்­கு­க­ளையும் பெற்­றுள்ளார்.

அதா­வது வடக்கு கிழக்கில் கோத்தாவை விட சஜித் முன்­னி­லையில் நின்­றுள்ளார்.

வெற்­றி­யைத்­ தீர்­மா­னித்த வாக்­குகள் முழு நாட்­டிலே கோத்த­பாய ராஜ­பக் ஷ   பெற்ற வாக்­குகள் 69லட்­சத்து 24 ஆயி­ரத்து 255 வாக்­குகள் சஜித்­ பி­ரே­ம­தாச  பெற்ற வாக்­குகள் 55 இலட்­சத்து 64   ஆயி­ரத்து 239 வாக்­குகள் அதா­வது சுமார் 14 இலட்சம் வாக்­கு­களால்  கோத்தா வெற்­றி­பெற்­றுள்ளார்.

இதன்­கா­ர­ண­மாக கோத்தாவின்  வெற்­றி யைத் தீர்­மா­னித்த வாக்­கு­க­ளாக வட­கி­ழக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை விட தென்­னி­லங்கை சிங்­கள வாக்­கு­க­ளாக  திகழ்­வ­தைக் ­கா­ணலாம். இவ்­வாக்­குகள் நாட்டில் சிறு­பான்மை மக்­களில் வெற்றி தங்­க­வில்லை. எனினும் அவர்­களை   அர­வ­ணைத்­துச்­ செல்­ல­வேண்டும் என்ற செய்­தியை சொல்­கி­றது. கோத்த­பாய கூட ஆரம்­பத்­தி­லேயே தமிழ்­பேசும் வாக்­குகள் இல்­லா­மலே நான் வெற்­றி­பெ­றுவேன் என்று பகி­ரங்­க­மா­கவே கூறி­ய­தை­யும்­ இங்கு பதி­வி­டுதல் பொருத்­த­மென கரு­து­கிறேன்.

வடக்கில் கோத்தா தோல்­வி­ய­டை­ய­வில்லை  மாறாக தோல்­வி­ய­டைந்­தது த.தே.கூட்­ட­மைப்பே என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ கூறி­யுள்­ளமை ஈண்­டு ­கு­றிப்­பி­டத்­தக்­கது.

மாவட்­ட ­ரீ­தியில் யாழ்.முத­லிடம்

வட-­கி­ழக்கில் மாவட்­ட­ ரீ­தியில் பார்த்தால் யாழ்ப்­பாண மாவட்­டம்தான் அதி­கூ­டிய வாக்­கு­வித்­தி­யா­சத்தில் சஜித் முன்­னி­லை­யி­லுள்ளார். இதுவே வட-­கி­ழக்கில் அதி­கூ­டிய வாக்கு வித்­தி­யா­ச­மாகும்.

சம்­மாந்­துறைத் தொகு­தியில் 86.22வீத வாக்­குகள் சஜித்­திற்கு.

அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள சம்­மாந்­துறை தொகு­தி­யி­லுள்ள பதி­வு­செய்­யப்­பட்ட 85911 வாக்­கா­ளர்­களில் 67166 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளித்­தனர். 494வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன.செல்­லு­ப­டி­யான வாக்­குகள் 67165 ஆகும்.

இந்த 67165 வாக்­கா­ளர்­களில் 57910 வாக்­கா­ளர்கள் சஜித்­திற்கு  அதா­வது 86.22 வீத­மான வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன. கோத்தாவுக்கு ஆக 7151வாக்­கு­களே அதா­வது 10.65 வீத வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

சம்­மாந்­து­றைத்­தொ­கு­தியில் தமிழ் முஸ்லிம் வாக்­கா­ளர்­களே உள்­ளனர். பெரும்­பான்­மை­யாக முஸ்­லிம்கள் உள்­ள­போ­திலும் தமிழ் வாக்­கா­ளர்­க­ளும் உள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மு.கா., ஐ.தே.க. மற்றும் த.தே.கூட்­ட­மைப்பின் பிர­சாரம் கார­ண­மாக சஜித்­திற்கு 86.22வீத­மான தமிழ்­வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன என கரு­த ­இ­ட­முண்டு.

அதன்­படி சம்­மாந்­துறைத் தொகு­தியில் அமோக வெற்­றி­யீட்­டி­ய­தற்கு தமிழ் பேசும் இரு சமூகங்­களும் பாரிய பங்­க­ளிப்­பைச்­ செய்­துள்­ளன.

வட-­கி­ழக்­கிற்கு அப்பால் மலை­யகம் உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லுள்ள தமிழ் பேசும் சமூகத்­தி­னரும் கணி­ச­மான ஆத­ரவை சஜித்­திற்கு  வழங்­கி­யுள்­ளனர் என்­பதும் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டி­ய­தல்ல. தென்­னி­லங்­கையில் சஜித்­ பி­ரே­ம­தாச பெரும்­பான்­மை­யின வாக்­கு­க­ளைப்­ பெ­று­வதில் கோட்­டை ­விட்­டு­விட்டார் என்றே கூற­வேண்டும். சுமார் 14லட்சம் வாக்­குகள் மாறி­விட்­டன. அதற்கும் கோத்தா அணி­யினர் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நன்­றி­ சொல்­ல­வேண்டும்.

மொத்­தத்தில் சிறு­பான்­மை­யி­னரை துரும்­பாக வைத்து பெரும்­பான்­மை­யின  வாக்­கா­ளர்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களால் தெரி­வான புதிய ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­­பக் ஷ  சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தோடு அவர்­க­ளது தேவைகள் அபி­லா­சைகள் அனைத்­தையும் பூர்த்தி செய்ய ஆவன செய்­ய­வேண்­டு­மென மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

புதிய ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­­பக் ஷவின் கன்­னி ­உ­ரையில் இன­ம­த­பே­த­மற்ற நாட்டை உரு­வாக்­குவேன் எனக்கு வாக்­க­ளித்த வாக்­க­ளி­யாத அனைத்­து ­மக்­க­ளுக்கும் தேசி­யத்­த­லை­வ­ரென்ற அடிப்­ப­டையில் சேவை­யாற்­றுவேன் என்று கூறி­யி­ருப்­பது வர­வேற்­புக்­கு­ரி­யது.. எனவே அவர்  இன்றைய அமைச்சர்களைப்போல் தங்கள் தங்கள் இனத்திற்கு சேவை­யாற்றுபவர்கள் போலல்லாமல் தேசியத் தலைவராக சகல இனமக்களுக்கும் சேவை யாற்றவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

வி.ரி.சகாதேவராஜா