தமிழ் மக்­களோ முஸ்லிம் மக்­களோ இன­வா­தி கள் அல்ல. அவர்கள் வாக்­க­ளித்­ததும் ஒரு சிங்­களப் பௌத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கே. அவர்கள் இன­வா­தி­க­ளாக இருந்­தி­ருந்தால் நிச்­ச­ய­மாக தமி­ழர்கள் சிவா­ஜி­லிங்­கத்­துக்கும் முஸ்­லிம்கள் ஹிஸ்­புல்­லா­வுக்கும் வாக்­க­ளித்­தி­ருக்க வேண்டும். தேர்தல் தினத்­தன்றும் தேர்தல் முடி­வ­டைந்த பின்பும் தமி­ழர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்தத் தாக்­குதல் கார­ண­மாக புதிய ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டு­க­ளுக்கு குந்­தகம் ஏற்­ப­டலாம். எனவே இதற்­கான உரிய நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக எடுக்­கப்­பட வேண்டும். அதே நேரம் தமிழ் மக்­க­ளி­னதும் முஸ்லிம் மக்­க­ளி­னதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துங்கள் என மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் பிரதித் தலை­வரும் விசேட பிர­தே­சங்­க­ளு­க்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்­ன­ரான நிலை­மைகள் தொடர்­பாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (19) கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தமிழ் மக்­களோ முஸ்லிம் மக்­களோ இன­வா­திகள் அல்ல. அவர்கள் வாக்­க­ளித்­ததும் ஒரு சிங்­கள பௌத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கே. அவர்கள் இன­வா­தி­க­ளாக இருந்­தி­ருந்தால் நிச்­ச­ய­மாக தமி­ழர்கள் சிவா­ஜி­லிங்­கத்­திற்கும் முஸ்­லிம்கள் ஹிஸ்­புல்­லா­விற்கும் வாக்­க­ளித்­தி­ருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அளித்த அனைத்து வாக்­கு­களும் பௌத்த சிங்­கள வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­ச­விற்கே. இதனை பெரும்­பான்மை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இந்­நாட்­டின் ­மீது பற்­றுள்­ள­வர்கள். அவர்­களும் இந்­நாட்டை நேசிப் ­ப­வர்கள். தேர்தல் தினத்­தன்று தெர­ணி­ய­கலை நூரி தோட்­டத்தில் எமது மக்கள் மீதான தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திக­தி­யன்று யட்­டி­யாந்­தோட்டை கணே­பொல மேல்­ பி­ரி­விலும் தாக்­குதல் சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. இதனை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். இவ்­வா­றான செயற்­பா­டுகள் புதி­தாக பத­வி­யேற்­றுள்ள ஜனா­தி­ப­தியின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­துமே தவிர அவர் மீது நல்­லெண்­ணத்தை வெளிப்­ப­டுத்­தப்­ போ­வ­தில்லை.  நடந்து முடிந்­துள்ள தேர்­தலில் கடு­மை­யான எதிர்ப்­பை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள தமிழ்,முஸ்லிம் மக்­களின் மனதை வென்­றெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அடுத்து நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களில் தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­கின்ற வகையில் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்த சம்பவத்தில் நேரடியாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்க மாட் டார்கள் என நான் நினைக்கின்றேன். ஆனாலும் தங்களுடைய ஆதரவாளர்களை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறு திப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.