(எம்.ஆர்.எம்.வஸீம்)

எங்­களால் விடப்­பட்ட தவ­று­களை இனம் கண்­டு­கொண்­டுள்ளோம். அவற்றை திருத்­திக்­கொண்டு மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வருவோம். அத்­துடன் தோல்­வி­களை கண்டு ஒரு­போதும் சளைத்­து­வி­ட­மாட்டோம். கட்­சியில் இருந்­து­கொண்டே எனது அர­சியல் நட­வ­டிக்­கையை ஆரம்­பத்தில் இருந்து கொண்­டு­ செல்­ல­வுள்ளேன் என விளை­யாட்­டுத்­துறை முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற பிரி­யா­விடை நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

அதி­காரம் என்­பது வரும் போகும். அதே­போன்று அமைச்­சுக்­க­ளுக்­கான அமைச்­சர்­களும் மாறி­மாறி நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். ஆனால் அரச அதி­கா­ரிகள் தொடர்ந்து அந்த துறையில் பணி செய்­யக்­கூ­டி­ய­வர்கள். அவர்கள் ஒரு­போதும் அர­சியல் வாதி­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தவ­றான விட­யங்­க­ளுக்கு துணை­போ­கக்­கூ­டாது. அவ்­வா­றான அர­சியல் கலா­சாரம் மாற்­றப்­ப­ட­வேண்டும்.

நான் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக சிறிது காலம்தான் இருந்தேன். என்­றாலும் நான்   அதி­கா­ரி­களை ஒரு­போதும் கேள்­வி­கேட்­ட­தில்லை. மாறாக எனது செய­லா­ள­ரு­டன் அனைத்து விட­யங்­க­ளையும் கேட்­ட­றிந்து, தேவை­யான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்றேன். அதே­போன்று அதி­கா­ரிகள் யாரும் எனக்கு பந்தம் பிடித்­துக்­கொண்டு செயற்­ப­டவும் இல்லை.

எங்­களால் ஏற்­பட்ட தவ­றுகள் கார­ண­மாக தேர்­தலில் தோல்­வியை சந்­திக்க ஏற்­பட்­டது. எங்­களால் ஏற்­பட்ட தவ­று­களை தற்­போது இனம் கண்­டு­கொண்­டுள்ளோம். அந்த தவ­று­களை திருத்­திக்­கொண்டு மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு முயற்­சிப்போம். அர­சாங்­கத்­தினால் விடப்­பட்ட தவ­றுகள் அனைத்தும் இறு­தியில் சஜித் பிரே­ம­தா­சவின் மீது சுமத்­தப்­பட்­டன.  கடந்த ஒரு வரு­டத்தில் பல சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்­டிய நிலை எனக்கு ஏற்­பட்­டது. ஆரம்­ப­மாக 52 நாள் அர­சியல் நெருக்­கடி. அதன் பின்னர் ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­த­லுடன் எனக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மிகவும் மோச­மான பிர­சாரம், அத­னைத்­ தொ­டர்ந்து எனது தந்­தையின் இழப்பு. தற்­போது தேர்தல் தோல்வி. என்­றாலும் தோல்­வி­களை கண்டு நான் ஒரு­போதும் சளைத்­துப்­போ­ன­தில்லை. அதனால் மீண்டும் எமது அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிக்க இருக்­கின்றோம். சஜித் பிரே­ம­தா­ச­வு­டனும் இது­தொ­டர்­பாக கலந்­து­ரை­யா­டினேன். வீடு­வீ­டாக சென்று எமது அர­சியல் வேலைத்­ திட்­டங்­களை தெளி­வு­ப­டுத்தி, புதி­ய­தொரு அர­சியல் கலா­சாரம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மாகும். அத்­துடன் நான் ஐக்­கிய தேசிய கட்­சியை விட்டு செல்­லப்­போ­வ­தாக செய்­திகள் பரவி இருக்­கின்­றன.  நான் ஒரு­போதும் ஐக்­கிய தேசிய கட்­சியை விட்டு செல்­ல­மாட்டேன். அரச நிறு­வ­னங்­களில் அர­சி­யல்­வா­தி­களின் படங்­களை தொங்கவிடக்கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ் தெரிவித்திருக்கின்றார். இதனை நான் வரவேற்கின்றேன். எமது எதிர்வாதியாக இருந்தாலும் நல்லவிடயங்களை ஏற்படுத் தும்போது அதனை பகிரங்கமாக வரவேற்போம். அதற்காக அவர்களுடன் இணைந்து கொள்ளப்போவதாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றார்.