மாங்குளம்-தடியப்பன் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று முல்லைதீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.