ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாடும், இலங்கை மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் அவரை, வாழ்த்துவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதே இம்ரான் கான் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமை மற்றும் பார்வையில் இலங்கை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ் நாடும் அதன் மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்றும் இம்ரான் கான் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் இந் உரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் இதன்போது இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.  

அதற்கிணங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவரின் அழைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.