(கம்­பளை நிருபர்)

கலஹா லூல்­கந்­தூர தோட்டப் பிர­தே­சத்தில் புதையல் தோண்­டிய குழு­வி­னரை பொலிஸார்  சுற்றி வளைத்து கைது செய்ய முற்­பட்ட சந்­தர்ப்­பத்தில் சந்­தேக நபர்கள் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் அங்­கி­ருந்து பெரு­ம­ளவு வெடி­பொ­ருட்கள்,  துப்­பாக்­கிகள், பௌத்த துற­விகள் அணியும் காவி உடை,  இரா­ணுவ சீரு­டைகள்  உட்­பட மேலும் பல பொருட்­களை  கைப்­பற்­றி­யுள்­ள­தாக கலஹா பொலிஸார் தெரி­வித்­தனர்.

பதின்­மூன்று கிலோ­கிராம் வெடி மருந்து, இரண்டு  கைத்­துப்­பாக்­கிகள்,  எட்டு ஜெலட்டின் குச்­சிகள்,  இரா­ணுவ சீரு­டைகள் இரண்டு, இரா­ணுவ பாத­ணிகள்,  பௌத்த துற­வி­களின் காவி  உடை  ஒன்று, மின் பிறப்­பாக்கி, கேஸ் சிலிண்டர்,  கற்­களை துளை­யிடும் உளிகள், அறுக்கும் கருவி, நான்கு அல­வாங்­குகள், வயர்கள், கேபல் கம்­பிகள், இரத்த கறைகள் படிந்த பூஜை பொருட்கள் உட்­பட மேலும் பல்­வேறு பொருட்­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

நேற்று (19) காலை பொலிஸ் அவ­சர சேவைப் பிரி­விற்கு கிடைக்கப் பெற்ற இர­க­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில்  ஸ்தலத்­திற்கு விரைந்த கலஹா பொலிஸார் சந்­தேக நபர்­களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மேற்­கு­றிப்­பிட்ட பொருட்­களை அவ்­வி­டத்­தி­லேயே விட்­டு­விட்டு சந்­தேக நபர்கள் ஆயு­தங்­க­ளுடன்  தப்பிச் சென்­றி­ருப்­ப­தாக  தெரி­ய­வ­ரு­கி­றது.

லூல்­கந்­தூர தோட்ட கல்லு மலை பிர­தே­சத்தில் பாதை­யி­லி­ருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் அர­சுக்கு சொந்­த­மான வனப்­ப­கு­தியில் காணப்­படும் கல் அடுக்­குக்கள் பகு­தி­யி­லேயே புதையல் தோண்டும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அக்­கா­லத்தில் கண்டி இராஜ்­யத்தின் மீதான படை­யெ­டுப்­புக்­களின் போது அங்­கு­ரங்­கெத்த பிர­தே­சத்­திற்கு  ராஜாக்கள் தப்பிச் சென்­ற­தாகக் கூறப்­படும் வழியில் பெறு­ம­தி­யான பொருட்­களை மறைத்து வைத்­தி­ருக்க கூடும்  என்ற நம்­பிக்­கையில் இதற்கு முன்­னரும் சுமார் மூன்று தட­வைகள் இவ்­வி­டத்தில் புதையல் தோண்டும் முயற்­சிகள் இடம் பெற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

பொலி­ஸா­ரினால் கண்­டெ­டுக்­கப்­பட்ட இராணுவ சீருடையில் காணப்பட்ட இலக்கத்தினூடாக சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.