(ரொபட் அன்­டனி)

அடுத்த பாரா­ளு­மன்ற தேர்தல்  தொடர்பில் சபா­நா­யகர் கட்சித்  தலை­வர்கள் மற்றும் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த எதிர்­பார்க்­கின்றேன் என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க  தெரி­வித்­துள்ளார்.  இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க இட்­டுள்ள டுவிட்டர் பதிவில்  இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில்

இலங்­கையின் ஏழா­வது  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு  வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றேன்.  நாங்கள் ஜன­நா­ய­கத்தை மதிக்­கின்றோம். எனவே  அடுத்த பாரா­ளு­மன்ற தேர்தல்  தொடர்பில் சபா­நா­யகர் கட்சித்  தலை­வர்கள் மற்றும் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த எதிர்­பார்க்­கின்றேன் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

இதே­வேளை  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய  பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித்  தலை­வ­ருடன் இந்த விடயம் குறித்து ஏற்­க­னவே பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.  இதே­வேளை  எதிர்க்­கட்சித்  தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ  உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளார். எனினும் பாரா­ளு­மன்­றத்தை கலைப்பதற்கு  150 எம்.பி. க்களின் கையொப்பங்களை பெறுவதில் சிக்கல்  நிலவுவதாக  தெரிவிக்கப்படுகின்றது.