Published by T. Saranya on 2019-11-20 10:06:59
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில வருடங்களில் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு எனது கௌரவமான நன்றியை தெரிவிக்கின்றேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி இட்டிருந்த டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இட்டிருந்த டுவிட்டர் பதிவில்,
“ இந்த நாட்டின் ஏழாவது ஜனாதிபதி என்ற வகையில் எனது கடமைகளை இன்று (நேற்று) காலை ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புடன் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில வருடங்களில் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு எனது கௌரவமான நன்றியை தெரிவிக்கின்றேன்”” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.