(ரொபட் அன்டனி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நேற்று மாலை இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்  இந்திய பிரதமர் மோடியின்  அழைப்பு கடிதத்தை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்  கையளித்தார்.  

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை  இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்   ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து பேச்சு நடத்தியபோது      புதிய ஜனாதிபதிக்கு வாழ்தது தெரிவித்ததுடன்    பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தையும்   கையளித்தார்.

அதன்படி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29  ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்வதாக  உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின்போது  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் மற்றும்  முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது  தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது.