2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெடுப்புக்கு வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்பட்ட கார்ட்போர்ட் பெட்டிகளை விற்பனை செய்வது அல்லது மீள்சுழற்சி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் கார்ட்போர்ட் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.