ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் சில அமைச்சர்களும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் தொடர்ச்சியாக தமது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர். 

இந் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்தை ஒப்படைத்து வெளியேற வேணடும் என அழுத்தங்கள் ஆளும் கட்சிக்குள்ளே எழுந்த வண்ணம் உள்ளது.

இது இவ்வாறிருக்க ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்களை கொண்ட ஒரு இடைக்கால அமைச்சரவை அமைத்து அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு தீர்மானம் மேற்கொண்டதாகவும் தவல்கள் வெளியாகியிருந்தன.

இந் நிலையில் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்வது மற்றும் அரசாங்கத்தை கலைப்பது தொடர்பான அறிவிப்பினை இன்று மாலை அறிவிப்பார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.