65 கிலோ மீற்றர் தூரம் ஓடிச்சென்று தனது எதிர்ப்பை தெரிவித்த  பொலிஸ் அதிகாரி

Published By: Digital Desk 4

19 Nov, 2019 | 10:01 PM
image

இந்தியாவில் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 65 கிலோ மீற்றர் தூரம் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பித்தோலியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் விஜய் பிரதாப். திடீரென இவரை, பணிபுரிந்த பொலிஸ் நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு பொலிஸ் நிலையத்திற்கு உயரதிகாரிகள் மாற்றம் செய்தனர்.

இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் பணிபுரிந்த பொலிஸ் நிலையத்திலிருந்து, புதிதாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றார்.

கடும் பனியிலும், குளிரிலும் நீண்டதூரம் ஓடியதால் களைப்படைந்த அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

"எதற்கு நீங்கள் இவ்வளவு தூரம் ஓடி வந்தீர்கள்..?" என, செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, "இதை, எனது கோபம் அல்லது அதிருப்தி என்று நீங்கள் குறிப்பிடலாம். ஆனால், உயரதிகாரிகளின்  சார்வாதிகாரப் போக்கை சுட்டிக்காட்டும் வகையில்தான் இவ்வாறு செயல்பட்டேன்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17