இலங்கைக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இந் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப் பேற்றதன் பின்னர் மேற்கொள்ளவுள்ள முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.