குளவித் தாக்குதலால் அவதியுறும் மலையக மக்கள்

Published By: Digital Desk 4

19 Nov, 2019 | 07:07 PM
image

லிந்துலை அக்கரகந்தை தோட்டத்தில் இன்று 11.30 மணியளவில் கொழுந்து நிறுத்துக் கொண்டிருந்த 35 தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் அவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களின் 24 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதுடன் 11 பேர் தொடர்ந்து  வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஆண்கள் 5 பெண்கள் 06 அடங்குகின்றனர்.

இவ்வாறு மலையகத்தின்  டயகம, லிந்துல, நுவரெலியா, நானுஒயா, தலவாக்கலை, பூண்லோயா, ராகல, ஹங்குரங்கத்தை,  பொகவந்தலாவ, கொட்டகலை, பத்தனை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா, சாமிமலை, நோட்டன், கினிகத்தேன, நாவலபிட்டிய மற்றும் மாத்தளை, கண்டி பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறான குளவி கொட்டுக்கு இலக்காகி நாளாந்தம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

குளவிகள் தம் வாழ்விடத்தை தேயிலை செடிகளின் உள்ளே அமைத்து கொள்வதாலும், தேயிலை செடிகளின் இடையே வளரும் முருங்கை போன்ற மரங்களில் கூடுகளை அமைத்து வருவதாலும் இவ்வாறு தேயிலை பறிக்க செல்லும் மக்கள், கங்காணி போன்றவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகின்றனர். 

அதுமாத்திரமின்றி தேயிலை செடிகளுக்கிடையே வளரும் களைகளை பிடுங்கி அழிக்காமல் இருப்பதாலும், அக்களைகள் அங்கே தேயிலைக்கிடையே காணப்படும் இடத்தை ஆக்கிரமித்து தேயிலை செடிகளை விட உயரமாக வளர்ந்து விடுகின்றன. இதனால் அவ்விடங்களில் பாம்பு, விஷ பூச்சியினங்கள், புலி வேறு கொடிய ஜந்துக்கள் அங்கு மறைந்திருந்து தேயிலை பறிக்க செல்லும் அப்பாவி மக்களை தீண்டுகின்றது.  

இவ்வாறு ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கமோ அல்லது ஏனைய நிறுவனங்களோ, தோட்ட நிறுவகங்களோ எடுப்பதாக தெரியவில்லை. தேயிலை செடிகளை பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் தேயிலைகளிடையே காணப்படும் களைகளை அகற்றுவதற்காவது ஏதேனும் நடவடிக்கை எடுக்குமாறு தோட்டத்தொழிலாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

இதற்கு தற்போதைய அரசாங்கமும், தோட்ட கம்பனிகளும் முன்வந்து தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதுடன் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணித்தவர்களுக்கு நஷ்ட ஈட்டையும், குளவி கொட்டுக்கு  வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கான நாளாந்த வேதனத்தையும் வழங்க  நடவடிக்கையை மேற்கொண்டு தொழிற்சங்கவாதிகள் கோரிக்கை விடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22