(செ.தேன்மொழி)

இலங்கை போக்குவர்த்து பிரிவின் கண்டி பிராந்திய அலுவலகத்தின் பரிசோதகர்களாக பணிபுரிந்த மூவருக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் இருவருக்கு பயணச் சீட்டு வழங்காமல் இருந்தமை தொடர்பாக பஸ் நாடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டின் போரிலே இம் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தின் போது குறித்த நடத்துனரிடம் 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக வழங்குமாறு கோரியுள்ள பரிசோதகர்கள் மூவரும் அதற்கமைய 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளும் போதேகைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பயணச் சீட்டு பரிசோதகர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.