அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் இயங்கி வரும் வால்மார்ட் வர்த்தக வளாகங்களில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளன.

ஒக்லஹோமா மாநிலத்தில் டன்கன் நகரில் செயற்பட்டு வந்த வால்மார்ட் கட்டட தொகுதியில் வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த தருணத்தில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக மையத்திற்குள் திடீரென உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், துப்பாக்கியால் சுட்டவர் என சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.