கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை 2019 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து 1593 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களை அவமதித்ததாக 650 முறைப்பாடுகளும், வேட்பாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக 147 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, மிலேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தவறான தகவல்கள் தொடர்பாக 142 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

தபால் மூல வாக்களிப்பில் புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த  37 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

1,593 முறைப்பாடுகளில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெயரில் 8 போலி கணக்குகளும் உள்ளன என்று மேலும்  தெரிவித்துள்ளது.