இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் தாங்கள் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றிநடைமுறைப்படுத்துவோம் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என சர்வதேச யூரிகள் ஆணைக்குழுவேண்டுகோள்விடுத்துள்ளது

அறிக்கையொன்றில்  சர்வதேச யூரிகள் ஆணைக்குழுஇந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

பெருமளவில் இனரீதியில் பிளவுபட்ட நிலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களிற்கு பின்னர் கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச யூரிகள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக  கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒருவர்  சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவார் என மனித உரிமை ஆர்வலர்கள் நம்புவதற்கான எந்த காரணமும் இல்லை என சர்வதேச யூரிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் நிலைமாற்றுகால நீதி அரசமைப்பு மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் சாதிக்கப்பட்ட சிறிய முன்னேற்றங்கள் அனைத்தும் வலுவிழக்கலாம் என்பதுகுறிதது ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்களை பொறுப்பாளிகளாக்குவன் மூலம் நிலைமாற்றுகால நீதிக்கான உத்தரவாதங்களை நிறைவேற்றுமாறு  சர்வதேச யூரிகள் ஆணைக்குழு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் மூலம் உருவாகியுள்ள  கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.