அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காலிபோர்னியாவில் உள்ள வீடொன்றில் வெளியே பெரிய திரை அமைத்து கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை‍ டன்கன் நகரில் உள்ள வால்மார்ட் வர்த்தக வளாகத்தில் வாகன நிறுத்தப் பகுதியில் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன் பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.