நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்து அணியுடன் இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை இங்கிலாந்து அணி 2:3 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் 'Mount Maunganui' யில் உள்ள பே ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் Mount Maunganui க்கு சென்றுள்ள இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியினரை அப் பிரதேச வாழ் பழங்குடியினர் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்துள்ளனர்.