மடகஸ்காரில் கையடக்கத் தொைலபேசிகளுக்கு சக்தியளிக்கப் பயன்படும் மைக்கா கனிமத்தை அகழும் சுரங்கங்களில் 3 வயது சிறார்கள் உள்ளடங்கலான சிறுவர்கள் 100 பாகை வெப்பத்தை தாங்கி நாளொன்றுக்கு 16 மணி நேரம் பணியாற்றி வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான ஆவணப் படத்தின் முதலாம் பாகம் நேற்று திங்கட்கிழமை இரவு என்.பி.சி. ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படமானது வாரமொன்றுக்கு மொத்தமாக 3 டொலரிலும் குறைந்த ஊதியத்தை பெற்று இளம் தாயொருவரும் அவரது 5 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடைய நான்கு பிள்ளைகளும் தினசரி ஆற்றும் பணியை விபரிக்கிறது.
அவர்கள் ஒரு கோப்பை உணவை தம்மிடையே பங்கீடு செய்து வயிற்றுப் பசியைத் தணிவித்துக்கொண்டு வியர்வை சிந்திப் பணியாற்ற அந்த மைக்கா சுரங்கத்தை செயற்படுத்தும் கம்பனியோ மைக்காவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருந்தொகைப் பணத்தை சம்பாதித்து வருகிறது.
மைக்கா அகழும் சுரங்கங்களில் சிறிய கரங்களைக் கொண்ட சிறுவர்களைப் பயன்படுத்துவது அனுகூலமளிப்பதாகவுள்ளதாக அந்த சுரங்கத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரியொருவர் பெருமிதத்துடன் கூறுவது அந்த ஆவணப்படத்தில் பதிவாகியுள்ளது.
மைக்காவானது கையடக்கத்தொலைபேசிகளுக்கு மட்டுமல்லாது விமானங்கள், கார்கள் என்பனவற்றுக்கு சக்தியளிக்கவும் பயன்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM