(எம்.மனோசித்ரா)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதற்கான விஷேட நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து வெற்றி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் பௌத்த வழிபாடுகளில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார். 

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இரு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 

இதே வேளை 10.51 சுபநேரத்தில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஆவணங்களில் கையெழுத்திட்டு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாதநிலையில் ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.