கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஏற்பட்ட விபத்தொன்றினால் துறைமுக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 9.30 மணியளவில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்து பொருட்களை இறக்கும்போது கிரேனின் சங்கிலி உடைந்து குறித்த நபரின் தலையில் விழுந்துள்ளது.

இதனால் குறித்த நபர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

47 வயதுடைய கடவத்தை எல்தெனிய பகுதியைச் சேர்ந்த குருலுபோத்தா வாடியே கெதரா பிரியந்த குணத்துங்கா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவர் ஆவார்.

உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.